Sunday, March 18, 2018

ராணி முகர்ஜி ரிட்டர்ன்ஸ்


தமிழ் திரையுலகில் சொல்லத் தகுந்த ஒரு படம் ஹேராம். இந்த படத்தில் கமலஹாசனுக்கு ஜோடியாக நடித்த ராணி முகர்ஜி ஆதித்ய சோப்ரா எனும் சினிமா தயாரிப்பாளரை மணம் முடித்து நீண்ட காலமாக சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். தற்போது மீண்டும் வெள்ளித்திரைக்கு திரும்பி இருக்கிறார். வலுவான வேடங்களில் நடிக்க விரும்புவதாக தெரிவித்து உள்ளார்.



வங்காளப் பெண்ணான ராணி தான் தைரியமானவர் என்பதால் வலுவான பெண் கதாப்பாத்திரம் உடைய கதைகளில் நடிக்க விரும்புவதாக தெரிவித்து உள்ளார். இந்திய திரைப்பட உலகம் சற்று மாறி இருப்பதாகவும், தன் திறமைக்கு ஏற்ற கதாப்பாத்திரங்கள் கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழில் திருமணம் ஆன பிறகு ஜோதிகா தற்போது வலுவான கதாப்பாத்திரங்கள் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். இதே போல ராணி முகர்ஜிக்கும் வாய்ப்பு கிடைத்து மீண்டும் ஒரு சுற்று வர வாழ்த்துவோம்!!!



Tags: , ,

0 Responses to “ராணி முகர்ஜி ரிட்டர்ன்ஸ்”

Post a Comment

Subscribe

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 Kollywood titbits. All rights reserved.
Designed by SpicyTricks