Sunday, March 18, 2018

நடிகையர் திலகமாக மாறிய கீர்த்தி சுரேஷ்


தமிழ் திரையுலகில் இது என்ன மாயம் படத்தின் மூலம் இயக்குனர் ஏ.எல்.விஜய்-ஆல் அறிமுகப்படுத்தப் பட்டவர் கீர்த்தி சுரேஷ். முதல் படத்திலேயே மாயமாகி விடுவார் என நினைத்தவர்க்கு ரஜினி முருகன் கை கொடுத்தது. பிறகு விஜய், தனுஷ், சூர்யா என மார்க்கெட் தாறுமாராக எகிறியது. கீர்த்தி சுரேஷுக்கு ஒரு புறம் ரசிகர்கள் நிறைய பேர் இருந்தாலும் அவரை கலாய்க்க என்றே ஃபேஸ்புக்கில் ஒரு கூட்டம் உண்டு.


தொடரி படத்தில் கீர்த்தி வாயாலேயெ எட்டு போட்டதை யாரும் மறக்க முடியாது.


கடைசியாக வெளிவந்த தானா சேர்ந்த கூட்டம், தியேட்டரில் கூட்டமே இல்லாமல் தோல்வியில் முடிந்தது.







 இந்த நிலையில் கீர்த்தியின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு துல்கருடன் இணைந்து நடிக்கும் நடிகையர் திலகம்.
அறுபதிகளில் கொடிகட்டி பறந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறே படம். தமிழ் தெலுங்கு உலகின் நிரந்தர நடிப்புலக ராணியின் கதாப்பாத்திரத்தை எப்படி கீர்த்தி தாங்குவார் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கவே, சாவித்ரியின் தோழி ஜமுனா நேரடியாகவே கீர்த்தி இதற்க்கு பொருந்த மாட்டார் என்று எதிர்ப்பு தெரிவித்தார். நெட்டிசன்களும் விட்டு வைக்கவில்லை, கலாய்ப்பும் கொஞ்சமில்லை.


ஆனால் சமீபத்தில் வெளியான நடிகையர் திலகம் படத்தின் புகைப்படம் ஒன்று அனைவரையும் வாயடைக்க செய்துள்ளது. இதில் கீர்த்தியிம் மேக்கப்பும் முக அமைப்பும், பாவனையும் அப்படியே சாவித்திரியை பிரதிபலிக்கிறது. இப்போது அனைவரும் ஆச்சர்யத்தின் உச்சியில். 



திரைப்படம் வெளிவந்த பின் தான் தெரியும் வெல்லப் போவது கீர்த்தியா இல்லை அவரை கலாய்க்கும் கூட்டமா என்று.

உங்களது மேலான கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடவும்.

Tags: , , ,

0 Responses to “ நடிகையர் திலகமாக மாறிய கீர்த்தி சுரேஷ்”

Post a Comment

Subscribe

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 Kollywood titbits. All rights reserved.
Designed by SpicyTricks